என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raanjhanaa"

    • ராஞ்சனா படம் மூலமாக தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
    • ராஞ்சனா படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது

    2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ராஞ்சனா (அம்பிகாபதி) திரைப்படம் வெளியானது. இப்படமே தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அண்மையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர். அதில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது.

    இந்த புதிய கிளைமேக்ஸ் அப்படத்தின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னுடைய கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸ்காட்சியை மாற்றி படத்தயாரிப்பு நிறுவனம் ரீரிலீஸ் செய்துள்ளதாகவும் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அப்படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்ததற்கு நடிகர் தனுஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஏஐ மூலம் மாற்றியமைக்கப்பட கிளைமேக்ஸை உடன் வந்துள்ள அம்பிகாபதி படம், என்னை முழுமையாக தொந்தரவு செய்துவிட்டது. என் கருத்தை மீறி இதை வெளியிட்டுள்ளனர். 12 வருடங்களுக்கு முன் நான் ஓகே சொன்ன படம் இது இல்லை

    ஏஐ மூலம் செய்யப்படும் இவ்வகை மாற்றங்கள், சினிமாவை அச்சுறுத்துகிறது. வருங்காலத்தில் இவ்விஷயத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை" என்று தெரிவித்தார்.

    • 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அம்பிகாபதி திரைப்படம் வெளியானது.
    • தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்.

    2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அம்பிகாபதி திரைப்படம் வெளியானது. இப்படமே தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில். படத்தை மீண்டும் நேற்று ரீரிலீஸ் செய்தனர். ஆனால் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர். அதில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது.

    இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. இதுக்குறித்த ஆனந்த் எல் ராய் கூறியதாவது " அம்பிகாபதி படத்தை என்னிடம் கூறாமலே  தயாரிப்பு நிறுவனம் ரீரிலீஸ் செய்துள்ளது . அந்த கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியதில் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய ஒரு படைப்பை எடுத்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த செயலை ஒரு துரோகமாக கருதிகிறேன்" என கூறியுள்ளார்.

    ‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush #Raanjhanaa
    ‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்லாமல் இருந்த தனுஷ், தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

    தனுஷ் - சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், அபய் தியோல் நடிப்பில் வெளியான `ராஞ்சனா’ படத்திற்கு ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், `ராஞ்சனா’ இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.



    முதல் பாகத்தில் ‘உயிர்த்து எழுவேன்’ எனச் சொல்லி இறந்துபோகும் குந்தன் குமார் பாத்திரம், இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும், காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை பின்னப்பட்டிருக்கிறதாம். கொடி படத்துக்கு பிறகு ஒரு முழு நீள அரசியல் கதையில் தனுஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Dhanush #Raanjhanaa2

    ×