search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punggye-ri nuclear test site"

    வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி அணு ஆயுத பரிசோதனை கூடங்கள் இன்று தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #nuclearsite #NorthKorea
    பியாங்யாங்:

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.


    இதற்கிடையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளதாக அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.

    மேலும், அப்பகுதியில் உள்ள அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், சோதனை மற்றும் பாதுகாப்பு சாவடிகளும் அகற்றப்படும் என தெரியவந்துள்ளது. அதனை பார்வையிட்டு உறுதி செய்ய வெளிநாட்டு ஊடகங்களுக்கு வடகொரியா அழைப்பு விடுத்தது. இதையடுத்து, ரியூட்டர்ஸ், சிஎன்என், சிபிஎஸ், ரஷியா டுடே மற்றும் சீன ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வட கொரியாவிற்கு சென்றனர்.

    இந்நிலையில், புங்யே-ரி அணு ஆயுத பரிசோதனை கூடங்கள் வெடி வைத்து இன்று தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #nuclearsite #NorthKorea

    ×