என் மலர்

  நீங்கள் தேடியது "pujas to"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் காலை முதல் இரவு வரை ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து அம்மனை தரிசித்தனர்.
  • ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

  ராசிபுரம்:

  ஆடி வெள்ளியை முன்னிட்டு ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் காலை முதல் இரவு வரை ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து அம்மனை தரிசித்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அப்போது அம்மன் அண்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  அதேபோல் ராசிபுரம் டவுன், ஈபி. காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர். அப்போது துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். ராசிபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

  அப்போது அம்மன் வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா லித்தார். அதேபோல் எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், பாரக்கல் புதூர் அத்தனூர் அம்மன் கோவில், புதுப்பாளையம் காமாட்சி அம்மன் கோவில், அத்தனூர் அத்தனூர் அம்மன் கோவில் உள்பட ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

  ×