என் மலர்
நீங்கள் தேடியது "puducherry police man death"
கடலூர் மஞ்சக்குப்பத்தில் மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதிய விபத்தில் புதுவை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
கடலூர்:
புதுவை மாநிலம் மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 55). இவர் புதுவையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை அவர் மோட்டார் சைக்கிளில் புதுவையில் இருந்து கடலூர் வந்து கொண்டிருந்தார். மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கண்ணன் தூக்கிவீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இந்தவிபத்து குறித்து புதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






