search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PUBLIC MEETING TO EXPLAIN BJP RECORD"

    • திருச்சியில் நாளை நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.
    • பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாநகர் மாவட்ட தலைவர் அழைப்பு

    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நாளை (7-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) திருச்சி புத்தூர் நால்ரோட்டில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். புறநகர் மாவட்ட தலைவர் ஆர்.அஞ்சா நெஞ்சன் வரவேற்கிறார். திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான கருப்பு முருகானந்தம் எஸ்.சி. அணி மாநில தலைவர் பெரியசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம்,

    விவசாய அணி மாநில துணைத்தலைவர கோவிந்த ராஜன், திருச்சி நகர் மாவட்ட முன்னாள் தலைவர்கள் தனபால், திருமலை, பார்த்திபன், தங்க.ராஜைய்யன், ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், பொன்.தண்டபாணி, பாபு மகாராஜன், அன்பில் சபரி, பொன்னுவேல், ராமச்சந்திரன், முத்தமிழ் செல்வன், ஜெயபால் மற்றும் மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். முடிவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் வி.பி.செல்வராஜ் நன்றி கூறுகிறார்.

    இதற்கிடையே திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் எஸ்.ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நாளை (7.6.2022) மாலை 5 மணிக்கு புத்தூர் நால்ரோடு பகுதியில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×