என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public is buying cantaloupe"

    • தேனி மாவட்டம் சின்னமனூர், ஓடைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் பாகற்காய் விளைச்சல் அதிக அளவு காணப்படுகிறது.
    • மற்ற காய்களின் விலை அதிக விலையேற்றத்தால், பாகற்காயின் சுவை கசப்பு என்றாலும் அதன் விலை குறைவாக இருப்பதால் அதனை பெண்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    சின்னமனூர்:

    தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தக்காளி, சின்னவெங்காயம் மற்றும் பெரும்பாலான காய்கறி கள் விலை அதிகரித்து விற்கப்படு கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மார்க்கெட்டில் எந்த காய் விலை குறைவு என பார்த்து அது பிடிக்க வில்லை என்றாலும் வீட்டுக்கு வாங்கிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது புடலங்காய், கொத்தவரை, சவ்சவ், பல்லாரி போன்ற காய்கறி களே விலை குறைவாக உள்ளது.

    மற்ற காய்கறிகள் அனைத்தும் ரூ.80க்கு மேல் விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.100க்கு மேல் கிடைப்பதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து வரு கின்றனர்.

    இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர், ஓடைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் பாகற்காய் விளைச்சல் அதிக அளவு காணப்படுகிறது.

    1 கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை வியாபாரிகள் நேரடியாகவே வாங்கிச் செல்கின்றனர். விவசாயி களும் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்து வரு கின்றனர். பாகற்காயின் சுவை கசப்பு என்றாலும் அதன் விலை குறைவாக இருப்பதால் அதனை பெண்கள் வாங்கிச் செல்கின்றனர். இதே போல பாகற்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதால் அவர்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    ×