என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public insistence to build quality"

    • பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • 50 கிலோமீட்டர் பயணம் செய்து பாலாற்றில் கலக்கிறது

    ஜோலார்பேட்டை:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நாட்றம்பள்ளி தாலுக்கா, காவேரிப்பட்டு கிராமத்தில் உள்ள கொட்டாறில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு தரமற்ற கம்பிகளையே பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த கொட்டாறு சுமார் 50 கிலோமீட்டர் பயணம் செய்து பாலாற்றில் கலக்கிறது. ஆற்றில் மழை வெள்ளம் அதிகளவில் வரும்போது பாலம் அடித்து செல்லும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் அனைத்தும் தரமாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×