search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PRP Company"

    கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. நிறுவனம் மூலம் அரசுக்கு ரூ.546 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Granitescam
    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் எடுத்த நடவடிக்கையில் கிரானைட் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.

    இது தொடர்பாக பி.ஆர்.பி. நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    மேலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள செக்கியேந்தல் கண்மாய் மற்றும் அரசு இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், அதன் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி மற்றும் 36 பேர் மீதான வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக அரசு வக்கீல் ஷீலா இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் மேலூர் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் மாஜிஸ்திரேட் பழனிவேலிடம் 3,186 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.


    அதில், பி.ஆர்.பி. நிறுவனம் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.546 கோடியே 10 லட்சத்து 59 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டு உள்ளது.

    மேலூர் நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட கிரானைட் முறைகேடு வழக்குகள் நடந்து வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Granitescam

    ×