என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Protest by breaking coconuts"

    • சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது.
    • தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    குண்டடம் : 

    தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி குண்டடத்தை அடுத்த குங்குமம் பாளையத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஏர்முனை இளைஞர் அணி அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தீரன் பிரகாஷ் தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜோதி பிரகாஷ், நந்தவனம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து, வட்டார தலைவர் மயில்சாமி, பொருளாளர் முருகேஷ் உள்பட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் தேங்காயின் அடிப்படை ஆதார விலையை உயர்த்த வேண்டும். ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். கள் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சிதறு தேங்காய்களை உடைத்தனர். இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×