என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PROSTITUTES ARRESTED"

    • திருச்சியில் பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
    • மேலும் இந்த விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வெளியூர்களை சேர்ந்த 3 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் கோவர்தன் கார்டன் பகுதியில் விபசார தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் கே.கே.நகர் ஐயப்பன் நகர் காமராஜர் தெருவை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 47), அரியலூர் மாவட்டம் கூத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரும் பெண்களை வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டது உறுதியானது.

    மேலும் இதில் ஈடுபடுத்தப்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சினேகா (21), தேனி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த பிரியா (24), நாமக்கல் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சுதா (33) ஆகிய பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு மூன்று பெண்களும் கேகே நகர் காவல் துறையினரால் மீட்கப்பட்டனர்.

    கைதான வைத்தியநாதன், மணிகண்டன் ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் வைத்தியநாதன் மீது மூன்று காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×