search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property tax rises"

    நாகர்கோவிலில் சொத்துவரி உயர்வை கண்டித்து 27-ந்தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.

    மத்திய அரசின் மானிய உதவித்தொகைகளை பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகை தாரர்கள், வணிகப் பெருமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியால் பாதித்து இருக்கின்ற நிலையில் சொத்து வரியை உயர்த்தி உள்ளது கண்டிக்கத்தக்கது.

    எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் முன்பு எனது தலைமையில் (சுரேஷ்ராஜன்) தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    ×