என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PRIZES FOR THE WINNING TEAMS IN THE GAME"

    • வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசு வழங்கினார்
    • 12 அணிகள் பங்கேற்று திறமைகளை வெளிபடுத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவில் ஆண்களுக்கான வாலிபால் போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டியினை காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தொடங்கி வைத்தார்.

    போட்டியில் மாவட்டத்தில் இருந்து 12 அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். போட்டியில் முதல் இடத்தை சு.ஆடுதுறை எவரெஸ்ட் வாலிபால் அணியும், 2-ம் இடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வாலிபால் அணியும், 3-ம் இடத்தை கொளக்காநத்தம் டி.ஜி.பி. வாலிபால் அணியும் பிடித்தனர்.

    பின்னர் மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.8 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.6 ஆயிரமும் பரிசுத் தொகையும், மேலும் அந்த அணிகளுக்கு பரிசு கோப்பையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

    4-ம் இடம் பிடித்த மாஸ் பெரம்பலூர் வாலிபால் அணிக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் மயிலாடுதுறையில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

    ×