என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private college students eve teasing"

    கடத்தூர் அருகே குடிபோதையில் பஸ்சில் சென்ற தனியார் கல்லூரி மாணவிகளை ஈவ் டீசிங் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கம்பைநல்லூர்:

    தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி பயிலும் மாணவிகளை நேற்று மாலை அவர்களை ஏற்றி கொண்டு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் தருமபுரி, கடத்தூர் அருகே உள்ள காவேரிபுரம், அய்யம்பட்டி, வேப்பிலைப்பட்டி, தாளநத்தம் உள்பட பல கிராமங்களுக்கு சென்று மாணவிகளை இறக்கி விட்டு வந்தது.

    அப்போது அந்த பஸ் அய்யம்பட்டியில் இருந்து காவேரிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றார். அவர் பஸ்சை 2 கிலோ மீட்டர் வரை துரத்தி சென்றார்.

    பின்னர் குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் காவேரிபுரத்தில் பஸ்சின் முன்புறம் சென்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி பஸ்சில் இருந்த டிரைவர் ராமர் (வயது 60) என்பவரை தாக்கினார். இதனை தட்டிகேட்ட மாணவிகளை ஆபாசமாக பேசி திட்டியும், மாணவிகளின் கையை பிடித்து இழுத்து தாக்கினார்.

    இதுகுறித்து அந்த பஸ்சில் வந்த 9 மாணவிகள் இன்று கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரித்ததில் கடத்தூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த சிங்காரவேலன் (22) என்பவர் பஸ்சில் சென்ற மாணவிகளை ஈவ்டீசிங் செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

    மற்ற மாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட மசோத நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அதே போன்று பெண்களுக்கான சட்ட மசோதவை நிறைவேற்றி பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×