என் மலர்
நீங்கள் தேடியது "Power generation after 22 months"
- இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
- குழாயை சீரமைக்க மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கி 22 மாதங்களுக்கு பிறகு தற்போது ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, ஹைேவவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு என 5 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேங்கும் தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக இரவங்கலாறு அணையில் இருந்து சுமார் 2000 மீ தொலைவில் உள்ள சுருளி நீர்மின்நிலையத்திற்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இதன்மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் மதுரை தலைமை வனபாதுகாவலர் தலைமையில் இரவங்கலாறு அணைப்பகுதியில் 220 மீ குழாயை சீரமைக்க மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கினர். இதனைதொடர்ந்து 22 மாதங்களுக்கு பிறகு தற்போது ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் பணிகள் முடிந்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கயத்தாறு மின்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.






