search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pottery objects"

    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்ட பொருள்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.
    • இங்கு தயார் செய்யபடும் மண்பாண்டபொருள்கள் மாலத்தீவு, அந்தமானுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்ட பொருள்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இங்கு தயார் செய்யபடும் மண்பாண்டபொருள்கள் மாலத்தீவு, அந்தமானுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு ஜனவரி முதல் டிசம்பர் வரை மானா மதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கம் மற்றும் குலாலர் தெரு, உடைகுளம் பகுதியில் வீடுகள் தோறும் மண்பாண்ட பொருள்களை ஆண்டு முழுவதும் தயார் செய்து வருகின்றனர்.

    அகிக அளவில் கோடை காலத்தில் மண்கூஜா, பானை, திருவிழா காலங்க ளில் அக்கினி சட்டிகள், தீபவிளக்குகள், சுவாமி சிலைகள் செய்யும் பணி நடைபெறும். தற்போது கார்த்திகை தீபதிரு விழாவிற்காக வீடுகள் தோறும் வித, விதமான கார்த்திகை தீப விளக்குகளை தயார் செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


    கலைநயம் மிக்க கார்த்திகை தீப விளக்குகள்.

    இந்த ஆண்டில் புதிய அறிமுகமாக கற்பக விநாயகர், முருகன், சரசுவதி, அம்மன், பெருமாள் உருவங்களுடன் தீப விளக்குகளை செய்து வர்ணம் தீட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர சரவிளக்குகள், சிறிய, பெரிய அளவிலான கிளியான்சட்டிகள், குபேர விளக்கு, தேங்காய் விளக்கு, சிவலிங்கம் விளக்கு, மண் குத்து விளக்கு எனதயார் செய்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மானாமதுரை மண் விளக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல ஊர்களில் இருந்து வியா பாரிகள் இங்கு வந்து உற்பத்தி விலைக்கு மண்பாண்ட பொருட்களை வாங்கி வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.

    மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்கள் உறுதி மிக்கது என்பதால் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்கள் காரில் குடும்பத்தினோரோடு வந்து மண்பாண்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    ஏராளமான இசை கலைஞர்கள் இங்கு மண்ணில் தயார் செய்யப்படும் கடம் இசை கருவியை வாங்கி செல்கின்றனர். தொடர்மழையால் சிலநாட்கள் மண்பாண்ட பொருட்கள் தயார் செய்ய முடியாத நிலைஇருந்தது.

    தற்போது மழைகுறைந்து வெயில் அடிப்பதால் கார்த்திகை தீப விளக்குகள் செய்யும் பணியில் மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×