search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollviolence"

    மேற்கு வங்காளம் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து மாநில அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #PanchayatElection #Pollviolence
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை துவங்கியது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.



    நதியா மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முர்ஷிதாபாத் பகுதியில் பாஜக பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.



    இதையடுத்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மற்றும் பல கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் வன்முறையை எதிர்த்து கொல்கத்தா நகரில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், தேர்தலின் போது மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PanchayatElection #Pollviolence

    ×