search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollachi mystery feveer"

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் லாவர்சன். இவர் கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள சஞ்சிவாடியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்குள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகள் ஹாசினி (வயது 5). இவர் கடந்த 15 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக லாவர்சன் தனது மகளை அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஹாசினிக்கு காய்ச்சல் அதிகமாகி மயங்கினார். இதனை பார்த்த லாவர்சன் தனது மகளை கோலார்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஹாசினி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×