search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poll commission"

    மோடியின் மிஷன் சக்தி பேச்சில் தேர்தல் விதி மீறல் உள்ளதா? இல்லையா? என்பதை தேர்தல் கமிஷன் இன்று முடிவு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #Modi #MissionShakti
    புதுடெல்லி:

    விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்திய ‘மிஷன் சக்தி’ திட்டம் மூலம் இந்தியா சாதனை நிகழ்த்தியதாக பிரதமர் மோடி நாட்டிற்கு அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதைத்தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு தேர்தல் விதி மீறலா? என்பது பற்றிய ஆய்வு செய்ய விசாரணை குழுவை தேர்தல் கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பிரதமரின் மிஷன் சக்தி திட்டம் தொடர்பான பேச்சில் தேர்தல் விதிமீறல் உள்ளதா? என கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை குழு 2 முறை கூடி ஆலோசனை நடத்தியது. ஊடகங்களில் பேசுவதற்கு முன் பிரதமர் தேர்தல் கமிஷனில் அனுமதி பெறவில்லை. அவரது பேச்சில் தேர்தல் விதி மீறல் உள்ளதா? இல்லையா? என்பதை தேர்தல் கமிஷன் இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு செய்யும்’ என தெரிவித்தனர்.
    ×