என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police rescued the destitute to orphanage"

    • ஆதரவு இன்றி சுற்றி திரிந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
    • ஆதரவின்றி சுற்றித் திரியும் நபர்கள் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டால் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. அறிவுரையின் படி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யகலா மற்றும் போலீசார் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம், குழந்தை வேலப்பர் கோவில், நாகனம்பட்டி, செக்போஸ்ட், மூலச்சத்திரம், கேதையுறும்பு உள்ளிட்ட பகுதியில் ஆதரவு இன்றி சுற்றி திரிந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நபர்கள் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டால் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    ×