என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Pongal Celebration"

    • ஏற்காடு போலீஸ் நிலையத்தில், பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி மகேஸ்வரி, டி.எஸ்.பி தையல்நாயகி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு போலீஸ் நிலையத்தில், பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன் தலைமையில் போலீஸ் நிலையம் முன்பு வாழை தோரணம் கட்டி, பொங்கல் பானை வைத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி மகேஸ்வரி, டி.எஸ்.பி தையல்நாயகி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினர். இதில் ஏற்காடு, காவல் துணை ஆய்வாளர்கள் சபாபதி, பிரபு சந்திரன் மற்றும் போலீசார், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×