என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police examined surveillance cameras"

    • 2 பேர் கைது
    • 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் நேதாஜி மார்க்கெட், சாரதி மாளிகை, லாங்குபஜார் பகுதிகளில் நிறுத்தப்படும் பைக்குகள் அடிக்கடி திருடப்படுகின்றன.

    இது குறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருட்டு கும்பலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நேதாஜி மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்பட்ட பைக் வந்து திருடு போனது.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் பைக் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன் மூலம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த காந்தி (வயது 65) கந்தனேரி குமார் (47) என்பது தெரியவந்தது. ஒடுகத்தூரில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர். அவர்கள் வேலூர் மார்க்கெட் பகுதியில் பைக்குகளை திருடி அணைக்கட்டு ஒடுகத்தூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் உள்ள சாராய கும்பலிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

    அவர்கள் திருடி விற்பனை செய்த 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×