search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POLICE BUILDUP"

    • திருச்சி அருகே ஏற்பட்ட திடீர் கோஷ்டி மோதலால் பதட்டத்தை தணிக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்
    • சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் லால்குடி டி.எஸ்.பி. சீதாராமன், இன்ஸ்பெக்டர் பிரபு, கல்லக்குடி சப் -இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் அருகிலுள்ள கல்லக்குடி நடுத்தெருவில் வசித்து வருபவர் கங்காதரன் மகன் கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பி பால் என்கின்ற பாலசுப்ரமணியன்.

    இவர்கள் இருவரையும் அதே பகுதியைச் சார்ந்த காமராஜ், சேகர், கவியரசன், மணிகண்டன், பிரேம்குமார், கிருஷ்ணவேணி, விஜயா, ஹேமலதா, ராஜாங்கம் மற்றும் இரண்டு பேர் கொண்ட கும்பல் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயனை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திகேயனுக்கும் காமராஜ் குடும்பத்திற்கும் இடையே கடந்த 15 நாட்களுக்கு இறந்தவர் ஊர்வலம் சென்ற பொழுது வெடி வைத்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பி இருவரும், காமராஜ் குடும்பத்தைச் சார்ந்த நண்பர்களிடம் எதற்கு என்னுடைய வீட்டுக்கு முன்னால் வெடி வைத்தீர்கள். இதனால் உடல் நலக்குறை காரணமாக இருந்த எனது அப்பா இறந்து விட்டார் என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.

    அதனால் ஆத்திரமடைந்த காமராஜ் குடும்பத்தினர் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பியை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    ேமலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் காமராஜின் மனைவி கிருஷ்ணவேணியும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் லால்குடி டி.எஸ்.பி. சீதாராமன், இன்ஸ்பெக்டர் பிரபு, கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கல்லக்குடி கடைவீதியில் பிரியாணி கடை நடத்தி வரும் காமராஜின் கடையை அடித்து நொறுக்கி உள்ளனர்.

    இதனால் கல்லக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×