search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ply Ash Bricks"

    • தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செம்மண் செங்கல்களுக்கு பதிலாக கிராமபுறங்களில் அதிகளவில் தற்போது பிளை ஆஷ் பிரிக்ஸ் எனும் நிலக்கரியில் இருந்து கழிவு பொருட்களாகி வரும் உலர் சாம்பல் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் செங்கல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
    • 4 மாவட்டங்களில் மட்டும் 192 நிறுவனங்கள் இந்த வகை செங்கலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுரண்டை:

    தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செம்மண் செங்கல்களுக்கு பதிலாக கிராமபுறங்களில் அதிகளவில் தற்போது பிளை ஆஷ் பிரிக்ஸ் எனும் நிலக்கரியில் இருந்து கழிவு பொருட்களாகி வரும் உலர் சாம்பல் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் செங்கல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

    2 லட்சம் தொழிலாளர்கள்

    இந்நிலையில் குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் 192 நிறுவனங்கள் இந்த வகை செங்கலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த நிறுவனங்களை சார்ந்து தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

    தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிகளில் அதிகளவில் இயங்கி வரும் பிளை ஆஷ் பிரிக்ஸ் நிறுவனங்களுக்கு தொழில் நலிவடைவதில் இருந்து காக்க தமிழக அரசு முனைப்பு காட்டுமா? என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர். இது குறித்து சுரண்டையை சேர்ந்த சக்திவேல் பிரிகாஸ்ட் இன்டஸ்ட்ரீஸ் தயாரிப்பாளர் சக்தி வேல்ராஜ் கூறியதாவது:-

    சரிவை நோக்கி

    பிளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மற்றும் நெய்வேலியில் உள்ள அனல் மின் நிலையங்களில் பயன்படுத்திய நிலக்கரியில் இருந்து கழிவு பொருட்களாக கிடைத்த உலர் சாம்பல் எனும் மூலப்பொருள் சிறிய நிறுவனங்களுக்கும் தாராளமாய் கிடக்கும் சூழ்நிலை இருந்து வந்தது.

    அதன் பின்பு பல்வேறு காரணங்களால் அந்த நடைமுறை தற்போது தடைபட்டு உள்ளதால் ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் மூலப்பொருட்கள் மொத்தமாக கிடைத்து விடுகிறது. அப்படி இல்லை என்றாலும் உலர் சாம்பல் மூலப் பொருட்கள் கடலில் கொட்டப்படுகிறது.

    இந்த பிளை ஆஷ் பிரிக்ஸ் வகை செங்கல்கள் இயற்கைக்கு உகந்ததாகவும், தரமானதாகவும் தயாரிக்கப்படுகிறது. நிலக்கரியில் இருந்து கழிவு பொருளாய் கிடைக்கும் உலர் சாம்பல்களை ஈ- டெண்டர் மூலம் ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு தொடர்ந்து மத்திய- மாநில அரசுகள் வழங்கி வருவதால் அதனை முறைப்படுத்திட தமிழக அரசும் மத்திய அரசும் முனைப்பு காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×