என் மலர்
நீங்கள் தேடியது "PKL6 Auction"
புரோ கபடி லீக்கின் 6-வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் 422 பேர் இடம்பிடித்துள்ளனர். நாளை முதல் இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறுகிறது. #PKL6
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏராளமான விளையாட்டுகளில் லீக் தொடர் தொடங்கப்பட்டு நடைபெற்ற வருகிறது. இதன் வழியில் கபடிக்கான புரோ கபடி லீக் தொடர் தொடங்கப்பட்டது. இதுவரை ஐந்து முறை கபடி லீக் தொடர் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில், இந்த வருடம் 6-வது தொடர் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் 422 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. 87 பேர் ஏற்கனவே விளையாடிய வீரர்கள் ஆவார்கள். இவர்களுடன் வங்காள தேசம், ஜப்பான், ஈரான், கென்யா, தென்கொரியா, மலேசியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த 58 வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஏலத்தில் 12 அணிகள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். கடந்து முறை விளையாடியவர்களில் 21 பேர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியும் 4 கோடி ரூபாய் வரை செலவழிக்கலாம். ஒரு அணியில் 18 முதல் 25 வீரர்கள் இடம்பிடிக்கலாம்.