search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pichadanar Kolam"

    • பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர் வீதி உலா நடக்கிறது.
    • 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் 7-வது நாளான இன்று காலை தங்க சப்பரத்தில் பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுடன் உலா வந்தார்.

    இறைவனை மறந்த ரிஷிகளுக்கும், ரிஷிபத்தி னிகளுக்கும் உணர்த்தும் வகையில் பிச்சாடனர் கோலத்தில் சுவாமியும்- அம்பாளும் பிச்சை பாத்தி ரம் ஏந்தி வலம் வந்தனர்.

    4 மாசி வீதிகள் வழியாக பிச்சாடனர் கோலத்தில் வலம் வந்த சுவாமிகளுக்கு பக்தர்கள் பிச்சை யளித்தனர். வீதி உலா முடிந்து மீண்டும் கோவிலுக்கு வந்த சுவாமி- அம்மன் சிவகங்கை ராஜா மண்டகப்படி, மீனாட்சி நாயக்கர் மண்டபங்களில் எழுந்தருளினர்.

    இன்று இரவு 7 மணி யளவில் நந்திகேசுவரர், யாழி வாகனத்தில் சுவாமி- அம்மன் வீதிஉலா 4 மாசி வீதிகளிலும் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    பட்டாபிஷேகம்

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் நிகழ்ச்சி நாளை (30-ந்தேதி) நடக்கிறது. இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    அப்போது மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி நவரத்தினத்தாலான செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ண னிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார்.

    பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருக்கல்யாணம்

    சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யா ணம் நடைபெறுகிறது. இதனை காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    ×