என் மலர்

  நீங்கள் தேடியது "Physical Education Teacher Kills"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மாட்டு வண்டி மோதிய விபத்தில் உடற்கல்வி ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  ஜெயங்கொண்டம்:

  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொடுக்கூர் குடிக்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வரங்கன் மகன் மாதவன்(வயது 22). உடற்கல்வி ஆசிரியரான இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது சித்தப்பா சிதம்பரநாதன் மகன் தனுஷை (16) அழைத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். 

  அப்போது இலையூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோட்டில் வந்தபோது ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்த சரக்கு வேனில் ஒன்றன்பின் ஒன்றாக 2 மாட்டு வண்டிகள் கட்டப்பட்டு இருந்தன. சரக்கு வேன் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும் போது ஒரு மாட்டு வண்டி கழன்று, மாதவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனுஷ் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

  இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ×