search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perumal Sudalai Aantavar Temple"

    • ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று மாலை தொடங்குகிறது.
    • விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது.

    ஏர்வாடி:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, நள்ளிரவு 2 மணிக்கு சாஸ்தா பிறப்பு நடக்கிறது.

    தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு மதியக்கொடை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணிக்கு பெருமாளுக்கு பால் வைத்தல், 6 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கரகாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பின்னர் பொங்கல் வைத்தல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி வீதி உலா வருதல், 10 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. கொடை விழாவுக்கான ஏற்பாடுகளை கீழக்கட்டளை ஊர்பொதுமக்கள் செய்து உள்ளனர்.

    ×