என் மலர்
நீங்கள் தேடியது "permanent bus stand"
- பொதுமக்கள் கோரி க்கையை ஏற்று குமுளியில் பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
- வணிக வளாக கடைகள், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான அறைகள் மற்றும் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் இந்த பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது.
கூடலூர்:
தமிழக - கேரள எல்லை யில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தின் கடைசி எல்லையாக கூடலூர் நக ராட்சி உள்ளது. இப்பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை இல்லாததால் லோயர் கேம்பில் தற்காலிக பணிமனை தொடங்க ப்பட்டது.
இருந்தபோதும் இங்கு நெடுந்தூரத்தில் இருந்து வரும் வெளியூர் பஸ்கள் மட்டுமே நின்று சென்றது. பெரும்பாலான பஸ்கள் நிற்காததால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
மேலும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. எனவே குமுளியில் நிரந்தர பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கூடலூர் நகர்மன்ற தலைவர் மூலம் எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜனுக்கும் இந்த கோரிக்கை அனுப்ப ப்பட்டது. பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி மூலம் இந்த பரிந்துரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பொதுமக்கள் கோரி க்கையை ஏற்று குமுளியில் பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகன்துரை, மண்டல இயக்குனர் ஆறுமுகம், பொது மேலா ளர்கள் டேனியல் சால மோன், சமுத்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிக வளாக கடைகள், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான அறைகள் மற்றும் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் இந்த பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.






