search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Permanent action should be taken to ensure that rainwater does not stagnate"

    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • மழை நீர் தேங்குவதால் மாணவர்கள் சிரமப்படுவதாக புகார்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஊராட்சி ஒன்றியம், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கியதையடுத்து மாணவர்கள் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    புகாரின் பேரில், அப்பள்ளிக்கு நேற்று கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு தண்ணீரை உடனடியாக அகற்றவும், மழைக்காலத்தில் பள்ளிகளில் மழைநீர் புகாமலும், மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளவும், மழைக்காலத்தில் கால்வாய்களை தூர்வாரி மழைநீர் செல்வதற்கு ஏதுவாக பராமரிக்கப்பட வேண்டும் என வருவாய்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து, ஆதியூர் ஏரி கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக நிரம்பி உள்ளதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும், ஏரியின் கரைகள் பலமாக உள்ளதா என்பதையும், ஏரியின் ஓரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றவும் வருவாய்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் கு.செல்வராசு, உதவி இயக்குநர் (தணிக்கை) மு.பிச்சாண்டி, கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி, தாசில்தார் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் சைனாம்மாள் சுப்பிரமணி, துணைத் தலைவர் ஏ.பி. பழனிவேல்உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×