என் மலர்
நீங்கள் தேடியது "Periyanaickenpalayam youth knife attack"
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்ம நாயக்கன் பாளையம் போர்வெல் தோட்டம் பகுதியில் பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியை சேர்ந்த அகிலேஷ் குமார் (26), அகிலேஷ் தாஸ் (26) ஆகியோர் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்து வந்தது. அகிலேஷ் குமாருக்கு அகிலேஷ் தாஸ் ரூ. 3 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
நேற்று இரவு அதனை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். அவர்கள் சமாதானம் அடையவில்லை.இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அகிலேஷ் தாஸ் கத்தியை எடுத்து அகிலேஷ் குமாரை சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அகிலேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அகிலேஷ்தாசை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






