என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People eagerly bought the items."

    • வாகனப்போக்கு வரத்து அதிகமாக காணப்பட்டது
    • மல்லி பூ கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது

    வேலூர்:

    ஆயுத பூஜை நாளில் வீடு, பட்டறை, தொழிற்சா லைகள் உள்பட வணிக வளாகங்கள் அனைத்தும் தூய்மை செய்து சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு நாளை ஆயுத பூஜையும், விஜயதசமி 24-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது.

    ஆயுதபூஜைக்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளதால் பூஜை பொருள்கள் வாங்க வேலூர் மாநகரில் உள்ள கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட மளிகை கடை வியாபாரிகள் கூறியதாவது;

    ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜைக்கு 2 நாட்களுக்கு முன்பு படையலுக்கு தேவையான பொரி, வெள்ளை சிவப்பு கொண்டைக்கடலை, பொட்டுக்கடலை, அவல், நாட்டு சர்க்கரை நிலக்கடலை, விபூதி, சந்தனம், குங்குமம், சாம்பிராணி, ஊதிபத்தி, கற்பூரம், கடலை உருண்டை, எள் உருண்டை, அலங்கார தோரணங்கள் உள்ளிட் டவைகள் விற்பனைக்கு வைக்கப்படும்.

    நாளை ஆயுத பூஜை என்பதால், வெளி மாநிலங் களில் இருந்து பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்து ள்ளோம். வழக்கமாக வாங்கும் அளவில் இருந்து 30 சதவீதம் கூடுதலாக வாங்கி உள்ளோம். அந்த வகையில், சிவப்பு கொண் டைக்கடலை ரூ.80 முதல் ரூ.90 வரையும், வெள்ளை கொண்டை க்கடலை ரூ.130 முதல் ரூ.150-க்கும், நாட்டுச்சர்க்கரை ரூ.70 முதல் ரூ.100-க்கும் நிலக்கடலை ரூ.120, அவல் ரூ.50, பொரி ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல், பழங்கள், பூசணிக்காய், ஸ்வீட் கடைகளில் இனிப்பு. காரம் ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பூஜையில் முக்கிய இடத்தை வகிக்கும் பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

    பெரிய சாமந்தி கிலோ ரூ.400,சிறிய சாமந்தி ரூ.150 முதல் ரூ. 300 வரையும், சிறிய பன்னீர் ரோஜாகிலோ ரூ.200 முதல் ரூ. 300 வரையும், மல்லி கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரையும், முல்லை கிலோ ரூ.700 -க்கும், கன காம்பரம் கிலோ ரூ.1,000 -க்கும், சாதி மல்லி கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது.

    மேலும் பூஜை முடிவில் திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் பூசணிக்காய், இதை தவிர ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் தேங்காய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    கடை வீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வந்ததால் மாநகரில் வாகனப்போக்கு வரத்து அதிகமாக காணப்பட்டது.

    ×