search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pedometer program"

    • அஷ்டமியை முன்னிட்டு ராமேசுவரத்தில் வீதி உலா வந்த சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • பகல் 12 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு சென்று அடைந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடை பெற்றது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அதன்படி இன்று (16-ந் தேதி) அஷ்டமி பூப்பிரத ஷணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நடந்தன. 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து திருப்பள்ளி, கால சாந்தி பூஜைகள் நடைபெற்றது.

    அதன்பின் பக்தர்களுக்கு படியளக்கும் நிகர்ச்சி நடைபெற்றது. காலை 7 மணிக்கு ராமநாதசாமி பிரியாவிடையுடனும், பர்வதவர்த்தினி அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழி நெடுகிலும் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அஷ்டமி வீதி உலாவை முன்னிட்டு கோவிலில் இன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடை சாத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு சென்று அடைந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடை பெற்றது.

    காலையில் நடை சாத்தப்பட்டிருந்ததால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் ரத வீதி, அக்னிதீர்த்த கடற்கரையில் காத்திருந்தனர்.

    ×