என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patrol Auto"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாநகரில் போலீசாருக்கு சிவப்பு நிறத்துடன் கூடிய 2 பேட்டரி ரோந்து ஆட்டோக்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • ரோந்து பேட்டரி ஆட்டோவில் நான்குபுறமும் போக்குவரத்து போலீசாரின் தொலைபேசி மற்றும் அவசர உதவி எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    கோவை:

    இந்தியா முழுவதும் போலீசார் ஜீப், கார், பைக் ஆகிய வாகனங்களில் ரோந்து சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தேசிய அளவில் முதல் முறையாக, கோவை மாநகரில் போலீசாருக்கு சிவப்பு நிறத்துடன் கூடிய 2 பேட்டரி ரோந்து ஆட்டோக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவற்றில் எச்சரிக்கை ஒலிபெருக்கி மற்றும் சிவப்பு, நீல விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. ரோந்து பேட்டரி ஆட்டோவில் நான்குபுறமும் போக்குவரத்து போலீசாரின் தொலைபேசி மற்றும் அவசர உதவி எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    மேலும் அந்த ஆட்டோக்களில் பொருட்களை ஏற்றி செல்லும் வசதி உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக கோவை மாநகரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள ரோந்து பேட்டரி ஆட்டோ இன்று முதல் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

    ×