search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Path to Success Program"

    • நிகழ்ச்சியை கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மெர்சி பத்மாவதி தொடங்கி வைத்தார்.
    • தூத்துக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜூடித் கிருபா அரசுத்துறை சார்பான படிப்புகளை குறித்த விளக்கம் அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் என்ஜினீயரிங் கல்லூரி - சிபி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களின் எதிர் காலத்திற்கு சரியான உயர்கல்வியை தேர்வு செய்ய தமிழகத்தின் சிறப்பான கல்வியாளர்க ளைக் கொண்டு வெற்றிக்கு வழி என்ற நிகழ்ச்சி தூத்து க்குடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜ் மஹாலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பிளஸ்- 2 முடித்த மாணவ- மாணவி கள் அடுத்த கட்டமாக எந்த வகை யான உயர்கல்வியை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து பல்வேறு துறை களில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

    கல்லூரி பேராசிரியர் ஜெயம் ஜாக்குளின் முன்னி லை வகித்தார். கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மெர்சி பத்மாவதி தொடங்கி வைத்தார். கல்லூரி நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரகாஷ் ராஜ்குமார் தலை மை உரை ஆற்றினார். கல்லூரி தாளாளர் வக்கீல் ராஜ ரத்தினம் சிறப்புரை ஆற்றினார்.

    சொக்கலிங்கம் பாலாஜி வரவேற்புரை மற்றும் சிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி பற்றிய குறிப்புகளை வழங்கினார். ஹோலிகிராஸ் என்ஜினீயரிங் கல்லூரி யில் பயில்வதால் ஏற்படும் பயன்களையும் நன்மை களையும் குறித்து கல்லூரி துணை முதல்வர் ப்ரீத்தி மாணவ- மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.

    நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினர்களாக வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஜோசப் செங் குட்டுவன் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் இருந்து ராஜதுரை விளக்கம் அளித்தார்.

    சட்டம் பயில்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தூத்துக்குடி நீதிமன்ற அரசு வக்கீல் ஜோசப் செங்குட்டு வன் எடுத்து ரைத்தார். சார்ட்டட் அக்கவு ண்டன்ட் படிப்பதை குறித்த விளக்கத்தை ஆடிட்டர் பொன் பாண்டியன் தெரிவித்தார்.

    ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை பயில்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பிளாக் பாரஸ்ட் லீட் இன்ஸ்டியூட் செப் தஸ்நெவிஸ் ஆண்டனி அர்னால்ட் மாணவர்க ளுக்கு விளக்கம் அளித்தார்.

    தூத்துக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜூடித் கிருபா அரசுத் துறை சார்பான படிப்புகளை குறித்த விளக்கத்தை அளித்தார். மருத்துவம் படிப்பதன் மேன்மை மற்றும் வெளி நாடுகளில் மருத்துவக் கல்வி கற்பது குறித்து டாக்டர் கெட்சி பீட்டர் ஆலோசனை வழங்கினார்.

    தொடர்ந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் ரீநெட் ஜோயல் மருத்துவ அறிவியல் தொடர்பான படிப்புகளை பயில்வதால் ஏற்படும் நன்மைகளை குறித்து விளக்கம் அளித்தார். டாக்டர் ஸ்ரீதேவி பல் மருத்து வம் பயில்வது தொடர்பான விளக்கமளித்தார்.

    பொறியியல் துறையை தேர்ந்தெடுத்து படிப்ப தனால் ஏற்படும் நன்மை கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்த விளக்கத்தை ஹோலி கிராஸ் பொறியி யல் கல்லூரி முதல்வர் அருண் மொழி செல்வி மாணவர் களுக்கு எடுத்துரைத்தார்.

    விழாவில் ஹோலிகிராஸ் கல்லூரி மாணவ மாணவி களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் பிளஸ்-2 படித்து முடித்த ஏராள மான மாணவ- மாணவி கள் பங்கேற்று பயனடைந் தார்கள்.

    விழாவில் பங்கேற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளும், ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் சி.பி.ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் சொக்கலிங்கம் பாலாஜி நன்றி கூறினார்.

    இவ்விழாவினை கல்லூரி நிறுவனர் டாக்டர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமையில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரி யர்கள் அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×