search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasi Amman temple"

    • சோழர் கால பாசி அம்மன் கோவில் புனரமைப்பு தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும்.
    • மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில வழக்கறிஞர் அணி செய லாளர் கலந்தார் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாசிபட்டினம் கி.பி. 875 முதல் கி.பி. 1090 வரையில் துறைமுகமாக இருந்துள்ளது. இங்குள்ள கடற்கரை அருகில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாசி அம்மன் கோவில் மற்றும் மண்டபம் இருந்துள்ளது.

    இங்கு சோழர்களின் வெற்றியின் அடையாளமாக 8 கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசி அம்மன் சிலை இருந்துள்ளது. இந்தநிலையில் இந்த கோவில் தற்போது எந்தவித பராமரிப்புமின்றி சிதில மடைந்து காணப்படுகிறது. எனவே பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவிலை பாதுகாத்து மக்கள் வழிபாடு செய்வதற்கு புனரமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோ ரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது.

    இந்த கோவில் கட்டுமானங்கள் கருங்கற்களால் அமைந்துள்ளது. கோவில் உள் மண்டபம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த கோவிலை புனரமைப்பு செய்வதற்கு தொல்லியல் வல்லுநர்களிடம் ஆலோ சனை பெற வேண்டியுள்ளது. எனவே அதற்கு உரிய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    ×