என் மலர்
நீங்கள் தேடியது "PARTY OF INDIA CONFERENCE"
- இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநாடு நடைபெற்றது
- நிலம் இல்லாத அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் ஒன்றிய மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய அமைப்பாளர் இரா சக்திவேல் தலைமை வகித்தார். பாலசுப்பிரமணியம், மாதவராஜ், ஆரோக்கியதாஸ், வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநாட்டு கொடியை ஜீவா ஏற்றி வைத்தார்.மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் ஜோதிவேல் மாநாட்டு பார்வையாளராக கலந்து கொண்டார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மாவட்ட செயலாளர் மணிமேகலை, திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், அறந்தாங்கி ஒன்றிய அமைப்பாளர் மதி முருகன், நீதிக்கான மக்கள் இயக்கம் மாவட்ட குழு பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட செயலாளர் பழ,ஆசை த்தம்பி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியில் 11 பேர் கொண்ட ஒன்றிய குழு அமைக்கப்பட்டது.அ. வீரப்பன் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் 100 நாள் வேலை திட்டத்தை 300 நாள் வேலை திட்டமாக அறிவிக்க வேண்டும். 500 ரூபாய் கூலி வழங்க வேண்டும். வீட்டு மனைகள் இல்லாதவருக்கு வீட்டு மனைகள் வழங்க வேண்டும்,
நிலம் இல்லாத அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், தலித் மக்களுக்கு உள்ளூர் அதிகாரத்தில் ஊர் சொத்தில் உரிமை கேட்டும், தனி குடியிருப்பு.தனி குவளை முறை,தனி சுடுகாடு போன்ற தீண்டாமை கொடுமைகளை முற்றிலும் கைவிட வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம், தடையில்லா வங்கி கடன், இடுபொருட்கள் விலைகளையும் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் ஒன்றிய மாநாடு நடைபெற்ற ேபாது எடுத்தபடம்






