என் மலர்
நீங்கள் தேடியது "Panruti sand smuggling"
பண்ருட்டியில் அனுமதியின்றி மணல் அள்ளி 6 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைதானார்கள்.
பண்ருட்டி:
பண்ருட்டி எலந்தம்பட்டில் உள்ள கெடிலம் ஆற்றில் அனுமதிபெறாமல் சிலர் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை கெடிலம் ஆற்றுப்பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கு சிலர் மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் மணல் அள்ளிய பெரிய எலந்தம்பட்டை சேர்ந்த வேலு (55), மணி (40), கந்தன், குமார், பத்மநாபன், ராஜேந்திரன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.