என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pannaikadu Municipality meeting"

    • பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
    • பூட்டிய அறைக்குள் பேரூராட்சி கூட்டம் நடந்தது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம் தலைவர் முருகேஸ்வரி மணிகண்டன் தலைமையில் நடந்தது. உள்பக்கமாக பூட்டிய அறைக்குள் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

    பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. கவுன்சிலர்கள் வரும்போது மட்டும் கதவு திறக்கப்பட்டது. அவர்கள் உள்ளே சென்றதும் மீண்டும் கதவு பூட்டு போட்டு பூட்டப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய பேரூராட்சி மன்ற கூட்டம் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை.

    மேலும் வீட்டு வரி, குடிதண்ணீர் வரி செலுத்த வந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் பூட்டியிருந்ததை பார்த்து விட்டு திரும்பி சென்றனர். பூட்டிய அறைக்குள் பேரூராட்சி கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என பொதுமக்கள் கேள்வி எழுப்பிச்சென்றனர்.

    ×