search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Organizations"

    • ஜெம் இணையதளத்தில் கொள்முதல் செய்யும் மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு.
    • அரியானா மாநிலத்தில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

    ஜெம் எனப்படும் அரசு மின்னணு சந்தை மூலம் பஞ்சாயத்து அமைப்புகள் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பி.கே.சிங், தெரிவித்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தம் பதிவு செய்துள்ள 8 லட்சம் நிறுவனங்களில் 4 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்றார். ஜெம் அமைப்பை பஞ்சாயத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைத்ததன் மூலம் ஆன்லைன் மூலம் பொருட்களை கொள்முதல் செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தத் திட்டம் ஹரியானா மாநிலத்தில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றிருப்பதால் அடுத்தக்கட்டமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகக் அவர் கூறினார். மாநில அரசின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் காரணமாக ஜெம் இணையதளத்தில் கொள்முதல் செய்யும் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்நிறுவனங்கள். சுயஉதவிக் குழுக்கள். பெண் தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப்கள், கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுக்கவும் வழி வகை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    ×