என் மலர்
நீங்கள் தேடியது "Palanivel"
- ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், ‘நீலகிரி நில அமைப்பு’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கு நடந்து வருகிறது.
- பழங்குடியினர் விடுதிகள் மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், 'நீலகிரி நில அமைப்பு' குறித்த மூன்று நாள் கருத்தரங்கு நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2-ம் நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
இதில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் கருத்தரங்கில் பேசியதாவது:-
ஊட்டியின் மந்தமான வளர்ச்சி வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனை மாற்றும் வகையில், அனைவரும் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். இதற்கு வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அதற்கு இதுபோன்ற கருத்தரங்குகள் மிகவும் அவசியம்.
கடந்த 2 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகள் வரை வனப்பகுதி விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதற்கான பயன்களை 'டிஜிட்டல்' வரைபடம் ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
நீலகிரியில் உள்ள பழங்குடியினர் விடுதிகள் மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. நான் நிதி அமைச்சராக இருந்தபோது, நில குத்தகை புதுப்பித்தல் பணிகள் முழுவதும் நிறுத்தப்பட்டது.
அனைத்து நிலங்கள் மற்றும் குத்தகைகளையும் கணக்கெடுக்க நடவடிக்கை எடுத்தேன். வனப்பகுதிகளை ஒட்டிய நிலங்களை மீண்டும் காடுகளாக மாற்ற வேண்டும். அப்போது தான் மலை பகுதிகளின் சுற்றுச்சூழல் மேம்படும். உயிர்ச்சூழல் மண்டலம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பேசினார்.






