search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Crisis"

    • மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
    • நிதி அமைப்புமுறையை மருந்து உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பாகிஸ்தானில் கடும் நிதி  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், ஆபத்தான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், டாலர் அழுத்தத்தையும் எதிர்கொள்கிறது. இதனால் நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் நிதி நெருக்கடியால் பாகிஸ்தானின் சுகாதாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகள் அல்லது உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது,

    இதனால், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகளை நிறுத்திவைக்க வேண்டும் என டாக்டர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

    ஆபரேஷன் தியேட்டர்களில், இதயம், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மயக்க மருந்துகள், இரண்டு வார தேவையைவிட குறைவாகவே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலைமை நீடித்தால் மக்களின் துயரங்கள் அதிகரிப்பதுடன், பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில் வேலை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சுகாதார அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடிக்கு நிதி அமைப்புமுறையை மருந்து உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வணிக வங்கிகள் தங்கள் இறக்குமதிகளுக்கு புதிய கடன் தொடர்பான கடிதங்களை வழங்கவில்லை என்றும் கூறி உள்ளனர்.

    முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறையைக் கண்டறிவதற்காக அரசாங்க ஆய்வுக் குழுக்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டதாக பஞ்சாப் மருந்து விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். சில பொதுவான மருந்துகள், முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை பாதிக்கிறது என்று சில்லறை விற்பனையாளர்கள் கூறி உள்ளனர். இந்த மருந்துகளில் பனாடோல், இன்சுலின், புரூஃபென், டிஸ்ப்ரின், கால்போல், டெக்ரல், நிம்சுலைட், ஹெபமெர்ஸ், புஸ்கோபன் மற்றும் ரிவோட்ரில் போன்ற மருந்துகள் அடங்கும்.

    • பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி குறித்து கருத்துக்களை கேட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது
    • இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என பாகிஸ்தான் வாலிபர் கூறியுள்ளார்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறையில் ஏற்பட்ட பாதிப்பால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது.

    இந்நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்டு, பாகிஸ்தான் யூடியூபர் சனா அம்ஜத் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் பத்திரிகையாளரான சனா அம்ஜத் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், பாகிஸ்தான் இளைஞர் ஒருவர், தற்போது நாட்டில் நிலவும் விவகாரங்கள் குறித்து ஷேபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பேசுவதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை ஆட்சி செய்தால் நியாயமான விலையில் பொருட்களை வாங்கியிருக்க முடியும் என்று கூறுகிறார்.

     பிரதமர் மோடியையும் அவரது செயல்பாடுகளையும் வெகுவாகப் புகழ்ந்த அந்த பாகிஸ்தானியர், மோடி இருந்தால், நமக்கு நவாஸ் ஷெரீப் அல்லது பெனாசிர் அல்லது இம்ரான் தேவையில்லை என்றார். நாட்டில் உள்ள அனைத்து விஷம சக்திகளையும் அவரால் சமாளிக்க முடியும், இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, நாம் எங்கும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    "இஸ்லாமிய தேசம் கிடைத்தாலும் இங்கு இஸ்லாத்தை நிலைநாட்ட முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம். மோடியின் ஆட்சியில் வாழ நான் தயார். மோடி ஒன்றும் மோசமான மனிதர் அல்ல. இந்தியர்களுக்கு பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கின்றன. இரவில் உங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலை வரும்போது, நீங்கள் பிறந்த நாட்டை அழிக்கத் தொடங்குகிறீர்கள். எனவே, மோடியை நமக்கு கொடுத்து, அவர் நம் நாட்டை ஆள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார் அந்த நபர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது.
    • பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    லாகூர்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

    உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    மேலும், கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டது. அதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

    1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு பல்வேறு விதிகளை விதித்துள்ளது. கடனை பெற சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை பின்பற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சீனா முன்வந்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை சீனா பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை சீன அரசு வழங்கியுள்ளது.

    சீனா கடனாக வழங்கும் இந்த பணம் இந்த வாரத்திற்குள் பாகிஸ்தான் மத்திய வங்கியில் செலுத்தப்பட உள்ளது. சீனாவின் இந்த நிதியுதவி பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×