என் மலர்
நீங்கள் தேடியது "Outstanding student"
- திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் மையத்தில் மூளைத்திறனை வளர்ப்பதற்கான பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
- மாணவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவிலான சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ரமேஷ் மகன் கோகுல் (வயது 11). இவர் பட்டிவீரன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் மையத்தில் மூளைத்திறனை வளர்ப்பதற்கான பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
மாணவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவிலான சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் நடந்த தேசிய அளவிலான மூளைத்திறன் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் மாசானம் தனது பேரனின் திறமையை வெளிக் கொண்டு வந்த ஆசிரியர்களுக்கும், தனியார் பயிற்சி மைய நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.






