search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ORDER OF FLATS FOR 67 PERSONS"

    • அடுக்குமாடி குடியிருப்பில் 67 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை கலெக்டர் வழங்கினார்.
    • வீடு கட்டிக்கொள்வதற்கான பணி ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்

    கரூர்:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரூ.270.15 கோடியிலான 9 அடுக்குமாடி திட்டப் பகுதிகளை திறந்து வைத்து நகர்ப்புற பகுதிகளில் ரூ.2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகளே வீடு கட்டிக் கொள்ள பணி ஆணைகளை நேற்று வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக, 67 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடுக்கான ஆணைகளையும், 348 பேருக்கு வீடு கட்டிக்கொள்வதற்கான பணி ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

    தொடர்ந்து அவர் பேசியது, கரூர் மாநகராட்சி சணப்பிரட்டியில் ரூ.16.08 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 192 வீடுகளில் 67 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும், மாவட்டத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் சொந்த வீட்டுமனை வைத்திருந்து கான்கிரீட் வீடு இல்லாதவர்கள்,

    ரூ.3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ள 348 பேருக்கு ரூ.2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகளே வீடு கட்டிக்கொள்வதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

    ×