search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opposition to establishment of pesticide"

    • 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டி ஏந்தியும் பல்வேறு பதாகைகளை ஏந்தி
    • பூர்வீக விவசாய நிலமான 7500 ஏக்கர் நிலப்பரப்பு

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது சேலம் கெங்கவல்லி மண்மலை ஊராட்சி பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டி ஏந்தியும் பல்வேறு பதாகைகளை ஏந்தி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். வன்மலை ஊராட்சியில் 6 கிராமத்தை சேர்ந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கு பூர்வீக விவசாய நிலமான 7500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வரும் நிலையில் தற்போது பூச்சிக்கொல்லி நிறுவனம் மற்றும் எலி பேஸ்ட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான்அ பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே விவசாய நிலப்பகுதியில் மலை சுற்றி உள்ள இடத்தில் குவாரி அமைத்து மலைகளை வெட்டி எடுத்து வருகின்றனர். இதனால் ஆடு மாடுகள் மேய்க்க முடியாமலும் விவசாயம் செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    பூச்சிக்கொல்லி எலி பேஸ்ட் நிறுவனத்தால் நீர் மற்றும் மாசு மாசுபடுவதால் விவசாயம் அடியோடு அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம சபை கூட்டத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்படும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி நிறுவனம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். குவாரியை மூட வேண்டும் என்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    ×