search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operations"

    • திருப்பூர் மாவட்ட கலெக்டரின் செயல்முறை ஆணையின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    • ஆணையின்படி குத்தகைதாரர் அபராதத் தொகையினை செலுத்தி வருகிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு வழங்கப்பட்ட கற்குவாரி குத்தகை உரிமத்திற்கு எதிராக விஜயகுமார் என்பவர் அளித்த புகார் மனுவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சாதாரண கற்கள் மற்றும் கிராவல் வெட்டியெடுக்க வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தின் மீது விஜயகுமார் என்பவர் புகார் மனு அளித்ததன் பெயரில், மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட வட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் ஆணையர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சென்னை அவர்களால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு மூலம் புலத்தணிக்கை மற்றும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு வழங்கப்பட்ட கற்குவாரி உரிமமானது திருப்பூர் மாவட்ட கலெக்டரின் செயல்முறை ஆணையின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேற்படி ஆணையை எதிர்த்து ராமகிருஷ்ணன் என்பவரால் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் மேற்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. மேற்படி மேல்முறையீட்டு மனுவின்மீது ஆணையர், உரிய விசாரணை மேற்கொண்டு சிறப்புக் குழு அறிக்கையின் அடிப்படையில் குத்தகைதாரருக்கு ரூ.10,40,48,207 அபராதமாக விதித்தும், குத்தகைதாரர் தவணை முறையில் செலுத்திட கோரியதன் அடிப்படையில் இதனை மாதம் தோறும் தவணை முறையில் ரூ.30,00,000 அரசிற்கு செலுத்துமாறும், மேலும் அனைத்து கனிம விதிகளுக்கு உட்பட்டு குவாரிப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் செயல்முறை ஆணை 26.09.2022ன்படி உத்தரவிடப்பட்டது. மேற்கண்ட ஆணையின்படி குத்தகைதாரர் அபராதத் தொகையினை செலுத்தி வருகிறார்.

    ஆணையரின்ஆணைக்கு இணங்க குவாரி விதிகளுக்கு உட்பட்டு மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டும் கனிமம் வெட்டியெடுத்திட அறிவுறுத்தப்பட்டு குவாரிப்பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×