என் மலர்
நீங்கள் தேடியது "one person arrested"
புதுச்சேரி:
வீராம்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 34). இவரது மனைவி அரியாங்குப்பம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வர்மா, பிரகாஷ், சுந்தர் ஆகிய 3 பேரும் அவரை கிண்டல் செய்தனர்.
அவர் வீட்டுக்கு வந்து ஜெயராஜியிடம் கூறினார். அவர் வந்து என் மனைவியை ஏன் கிண்டல் செய்கிறாய்? என கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெயராஜை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஜெயராஜ் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் வீராம்பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் உதயசிங் (35). ஜிப்மர் ஊழியர். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவில் வந்த போது, 3 பேர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை உதயசிங் ஓரமாக நில்லுங்கள் என கூறினார். எங்களை எப்படி ஓரமாக நிற்க சொல்லலாம்? என கூறி அவர்கள் உதய சிங்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து உதயசிங் அரியாங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






