என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One is an elephant"

    • 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் சேதம்
    • ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா சின்னவரிகம் ஊராட்சி ரங்காபுரம் பகுதி 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் உள்ளது.

    50 ஏக்கர் பரப்பளவில் வாழை, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவை நன்கு வளர்ந்துள்ளது. இதில் விவசாய நிலங்களில் திடீரென புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்துள்ளது.

    இதில் வாழை, கேழ்வரகு உள்ளிட்டவைகளை நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் உம்ராபாத் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×