என் மலர்
நீங்கள் தேடியது "Old woman killed along with adulterer"
- உடல் எரிப்பு
- ஜெயிலில் அடைப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு அருகே உள்ள கண்ணமடை காப்பு காட்டு பகுதியில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த தச்சம்பட்டு போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் திருவண்ணா மலை பேகோபுரம் தெருவை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மனைவி விஜயா (வயது 65) என்பது தெரியவந்தது.
வெங்கடாசலம் ஏற்கனவே இறந்து விட்டார். அதன்பின்பு தனியாக வசித்து வந்த விஜயாவுக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி காஞ்சனா (38) அறிமுகமானார்.
விஜயாவுக்கு சொந்தமான வாடகை வீட்டில் மனநலம் பாதித்த மகனுடன் காஞ்சனா குடியேறினார்.
காஞ்சனாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் கட்டையன் என்கிற ஞானவேலு (38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஞானவேலு ஆட்டோ டிரைவராக உள்ளார்.
காஞ்சனா சரியான முறையில் வாடகையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரிடம் விஜயா வாடகையை செலுத்தும்படி தொடர்ந்து கேட்டு வந்தார்.
விஜயாவுக்கு சொந்தபந்தம் யாரும் இல்லாததை காஞ்சனா அறிந்தார். வாடகை கேட்டு விஜயா தொந்தரவு செய்வதால் கள்ளக்காதலுடன் சேர்ந்து அவரை கொலை செய்து விட்டு சொத்தை அபகரித்து விடலாம் என்று காஞ்சனா முடிவு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சாஞ்சனா, ஞானவேலு இருவரும் விஜயாவை வீட்டில் அடித்து கொலை செய்துள்ளனர்.
யாரும் அவரை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக விஜயாவின் உடலை கண்ணமடை காப்புக்காட்டிற்கு கொண்டு வந்து போட்டு மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு இருவரும் தப்பியது தெரியவந்தது.
இது குறித்து காஞ்சனா மற்றும் கட்டையன் என்கின்ற ஞானவேலு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






