search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officials raided"

    • ஆய்வின் போது காலாவதியான சவர்மா கண்டறியப்படவில்லை.
    • தரமான வகையில் சவர்மா தயார் செய்யப்படுவதையும் விற்பனை செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும் கொடைக்கானல் நகரில் சவர்மா தயாரிக்கும் உணவகங்களில் கொடைக்கானல் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ் ஆகியோர் இணைந்து ஆய்வு நடத்தினர்.

    ஆய்வின் போது காலாவதியான சவர்மா கண்டறியப்படவில்லை. சவர்மா தயாரிப்பாளர்கள் சுகாதாரமாகத் தயாரிக்க வேண்டும், பழைய இறைச்சிகளைப் பயன்படுத்தக்கூடாது, முழுவதும் வேகவைத்த பின்னரே அதனை விற்பனை செய்ய வேண்டும் எ ன அறிவுறுத்தப்பட்டது.

    தரமான வகையில் சவர்மா தயார் செய்யப்படுவதையும் விற்பனை செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். தரமற்ற சவர்மா தயாரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை செய்தனர். தொடந்து சவர்மா தயாரிப்பை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ஆய்வின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய ஒரு உணவகத்துக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ×