என் மலர்
நீங்கள் தேடியது "of the polling station"
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதியில் ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 4 தொகுதியில் எவ்வித திருத்தமும் இல்லை.
- தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளில் இருந்து வரப்பெற்ற ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு முன்மொழிவு–கள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பேசியதாவது:-
4 தொகுதியில் திருத்தமும் இல்லை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதியில் ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 4 தொகுதியில் எவ்வித திருத்தமும் இல்லை.
ஈரோடு கிழக்கில், மாநகராட்சி ஆரம்ப பள்ளி பி.மாரியம்மன் கோவில் வீதியில் இருந்து வந்த பழைய கட்டடம் பழுதடை–ந்ததால், கருங்கல் பாளையத்தில் உள்ள டிவைன் ஆரம்ப பள்ளியின் முதல் அறை க்கும், கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையத்தில் சிமெண்ட் சீட்டை எடுத்து தார்சு கட்டடமாக கட்டட வகை மாற்றம் செய்யப்ப ட்டுள்ளது.
ஈரோடு மரப்பாலம் ரோடு, பி.மாரியம்மன் கோவில் வீதி, மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் மேற்கு பார்த்த சிமெண்ட் சீட்டால் வேயப்பட்ட கட்டடத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையம், அதே கட்டடத்தின் சிமெண்ட் சீட்டை எடுத்து தார்சு கட்டடமாக மாற்றப்ப ட்டுள்ளது. இதுபோன்ற 4 சட்டசபை தொகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு, 'எனது வாக்கு எனது உரிமை', 'ஒரு வாக்கின் மகிகை' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு மகளிர் குழுவினர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.
இதற்கான போட்டிகளை பள்ளி, கல்லூரிகளில் வரும் அக்டோபர் 10-ந் தேதிக்குள் நடத்தி போட்டியாளர்களின் படைப்புகளை 30-ந் தேதிக்குள் பி.டி.எப். வடிவில் கலெக்டர் அலுவலக மின்னஞ்சல் முகவரியான ecuerode@gmail.com-க்கு அனுப்ப வேண்டும். பள்ளி நிர்வாகம் மூலம் பரிசுகள் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் மூவர் கொண்ட குழு அமைத்து, அதில் சிறந்த போட்டி யாளர்களின் படைப்பு தேர்வு செய்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று சிறப்பு பரிசு வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள், மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் முதல் 3 பரிசாக, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) குமரன், (சத்துணவு) மணிவண்ணன், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






